பீர் குடித்தால் உடல் எடை குறையும்… நிரூபித்து காட்டிய பீர் பாய்….

 

பீர் குடித்தால் உடல் எடை குறையும்… நிரூபித்து காட்டிய பீர் பாய்….

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் 46 நாட்கள் தொடர்ந்து பீர் மட்டுமே குடித்து 20 கிலோ எடையை குறைத்துள்ளார். 

பீர் குடித்தால் தொப்பை போடும் என்ற கருத்து பரவலாக இளைஞர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் 46 நாட்கள் தொடர்ந்து பீர் மட்டுமே குடித்து 20 கிலோ எடையை குறைத்துள்ளார். 

ஒஹியோ மாநிலத்தைச் சேர்ந்த 40 வயதான டெல் ஹால் என்பவர் அதிக எடை காரணமாக கவலைப்பட்டு வந்தார். இதனால் ஹால், ஈஸ்டர் முன் வரும் 40 நாட்களும் திட உணவை தவிர்த்து, பீர் மட்டுமே குடித்து விரதம் இருக்க முடிவு . 1600-களில் துறவிகள் எப்படி இருந்தனோ அதுபோன்று இருக்க விரும்புவதாகவும், பண்டைய பாரம்பரியத்திற்கு செல்லவேண்டும் என இத்தகைய முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கிறார். உணவை முழுமையாக தவிர்த்த ஹால், தினமும் ஐந்து கோப்பை பீர் மட்டுமே குடித்து வந்துள்ளார். 

இந்நிலையில், 46 நாட்களுக்கு பின் ஹால் 20 கிலோ எடை குறைந்துள்ளார். இதுகுறித்து டெல் ஹால் கூறுகையில், நான் சாதரணமாக விரதம் இருந்திருந்தால் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்குமா என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது. ஆனால், பீரால் இது நடந்துவிட்டது. தற்போது நான் 20 வயது இளைஞன் போல் உணருகிறேன் என மகிழ்ச்சியாக தெரிவிக்கிறார். 

ஹால் பீர் குடித்ததால் உடல் எடை குறைந்தாரா… அல்லது 46 நாட்கள் உணவுகளை உட்கொள்ளாததால் உடல் எடை குறைந்தாரா என்பது கேள்விக்குறியே….