பீகாரைப் பின்பற்றி என்.ஆர்.சி-க்கு மட்டும் தீர்மானம்! – அனுமதி கேட்டு காத்திருக்கும் எடப்பாடி

 

பீகாரைப் பின்பற்றி என்.ஆர்.சி-க்கு மட்டும் தீர்மானம்! – அனுமதி கேட்டு காத்திருக்கும் எடப்பாடி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் வலுத்து வருகிறது. டெல்லியில் நிகழ்ந்தது போன்று இங்கும் நடக்கும் என்று பா.ஜ.க மூத்த தலைவர்கள் மிரட்டிவரும் சூழ்நிலையில், நிலைமை கை மீறி சென்றுவிட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமியர்கள் வாக்கு அ.தி.மு.க-வுக்கு விழாது என்ற செய்தி எடப்பாடிக்கு கிடைத்துள்ளது.

என்.ஆர்.சி-க்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க-விடம் அனுமதி கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் வலுத்து வருகிறது. டெல்லியில் நிகழ்ந்தது போன்று இங்கும் நடக்கும் என்று பா.ஜ.க மூத்த தலைவர்கள் மிரட்டிவரும் சூழ்நிலையில், நிலைமை கை மீறி சென்றுவிட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமியர்கள் வாக்கு அ.தி.மு.க-வுக்கு விழாது என்ற செய்தி எடப்பாடிக்கு கிடைத்துள்ளது.  இதனால் என்.ஆர்.சி-க்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற பா.ஜ.க-விடம் அனுமதி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

nrc

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அரசு சமீபத்தில் என்.ஆர்.சி-க்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. பாரதிய ஜனதா ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் நிறைவேற்றினால்தான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்று டெல்லி பா.ஜ.க தலைவர்களிடம் எடப்பாடி தரப்பு தூது சென்றுள்ளது. அவர்கள் பரிசீலனை செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.

modi-and-ami-shah-98

இதனால்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னை சந்திக்க வந்த வண்ணாரப்பேட்டை போராட்டக் குழுவினரிடம் இரண்டு மூன்று நாட்களில் நீங்கள் எதிர்பார்க்கும் சாதகமான அறிவிப்பு வரும் என்று தெரிவித்துள்ளார். 
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவை போராட்டக் குழுவினரும் சரி, தமிழக பா.ஜ.க தலைவர்களும் சரி ஏற்க மறுக்கின்றனர். குடியரிமை திருத்தச் சட்டத்துக்கும் சேர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டக் குழுவினர் எதிர்பார்க்கின்றனர். எதற்கும் தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று பா.ஜ.க முரண்டு பிடிக்கிறது. அனைத்தையும் சமாளித்து தீர்மானம் நிறைவேற்றி, இஸ்லாமியர்களின் மனதைக் குளிரவைக்க எடப்பாடி தயாராகி வருகிறார் என்று கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன.