பி.எம்.கேர்ஸ் நிதிக்கு ரூ.35,000 நன்கொடை கொடுங்க…..வித்தியாசமான நிபந்தனைகளுடன் முன்னாள் எம்.பி.க்கு பெயில் வழங்கிய நீதிமன்றம்…

 

பி.எம்.கேர்ஸ் நிதிக்கு ரூ.35,000 நன்கொடை கொடுங்க…..வித்தியாசமான நிபந்தனைகளுடன் முன்னாள் எம்.பி.க்கு பெயில் வழங்கிய நீதிமன்றம்…

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் முன்னாள் எம்.பி. உள்பட 6 பேருக்கு பெயில் வழங்கையில், அவர்கள் அனைவரும் பி.எம். கேர்ஸ் நிதிக்கு தலா ரூ.35 ஆயிரம் நன்கொடை வழங்க வேண்டும் என்றும், சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் மொபைலில் ஆரோக்கிய சேது ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஜ்மஹால் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் பா.ஜ.க.வின் சோம் மராண்டி. 2012 மார்ச் 15ம் தேதியன்று ரயில் ரோகோ கிளர்ச்சி நடத்தியதாக சோம் மராண்டி மற்றும் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 6 பேர் மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து குற்றவாளிகளுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை நீதிமன்றம் வழங்கியது.

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்

இதனையடுத்து பா.ஜ..க. முன்னாள் எம்.பி. சோம் மராண்டி மற்றும் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் பெயில் கேட்டு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அனுபா ராவத் சவுத்ரி மனுதாரர்களின் பெயில் மனுக்களை விசாரணை செய்தார். பின் அசாரண நிபந்தனைகளுடன் முன்னாள் எம்.பி. உள்பட 6 பேருக்கும் பெயில் வழங்கினார்.

உயர் நீதிமன்ற நீதிபதி அனுபா ராவத் சவுத்ரி

சிறையிலிருந்து வெளியே வருவதற்கு முன், கோவிட்-19 எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை திரட்டுவற்கு உருவாக்கப்பட்ட பி.எம். கேர்ஸ் நிதியத்துக்கு மனுதாரர்கள் அனைவரும் தலா ரூ.35 ஆயிரம் டெபாசிட் செய்து அதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் தங்களது மொபைல் போன்களில் ஆரோக்கிய சேது ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் பெயில் வழங்கி நீதிபதி அனுபா ராவத் சவுத்ரி உத்தரவிட்டார்.