பிஸ்கெட்டிற்கு நாய்கூட வாலாட்டுகிறது ! இளைஞர்களுக்கு கைகூட தட்ட மனமில்லை ! அமைச்சரின் சர்ச்சை பேச்சு !

பிஸ்கெட்டிற்கு நாய்கூட வாலாட்டுகிறது ! இளைஞர்களுக்கு கைகூட தட்ட மனமில்லை ! அமைச்சரின் சர்ச்சை பேச்சு !

இளைஞர்களை நாயுடன் ஒப்பிட்டு பேசியதாக ஆந்திர அமைச்சர் தர்மான கிருஷ்ணதாஸ் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
அதற்கு காரணம் பிஸ்கட் போட்டால் நாய் வாலாட்டி நன்றி தெரிவிக்கிறது. அரசு உதவிகளை பெறும் இளைஞர்கள் கைகூட தட்டமாட்டார்களா என பேசியிருந்தார் அமைச்சர்.
தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் கடுமையாக பேசி விமர்சனத்திற்கு ஆளாவது உண்டு.

இளைஞர்களை நாயுடன் ஒப்பிட்டு பேசியதாக ஆந்திர அமைச்சர் தர்மான கிருஷ்ணதாஸ் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
அதற்கு காரணம் பிஸ்கட் போட்டால் நாய் வாலாட்டி நன்றி தெரிவிக்கிறது. அரசு உதவிகளை பெறும் இளைஞர்கள் கைகூட தட்டமாட்டார்களா என பேசியிருந்தார் அமைச்சர்.
தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் கடுமையாக பேசி விமர்சனத்திற்கு ஆளாவது உண்டு. அதேபோல ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் சாலை மற்றும் கட்டிடத் துறை அமைச்சராக இருப்பவர்தான் தர்மான கிருஷ்ணதாஸ்.

minister

இவர் ஸ்ரீகாகுளம் மாவட்டம் நரசன்னபேட்டை யில் சமீபத்தில்‘மெகா ஜாப் மேளா’என்ற வேலைவாய்ப்பு முகாம் தொடக்க விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி அரசு 4 லட்சம் வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்கி உள்ளதாக பேசினார். கூட்டத்தில் இருந்தவர்கள் இதை கேட்டு அமைதியாக இருந்ததால் ஆத்திரம் அடைந்தார் அமைச்சர் கிருஷ்ணதாஸ். மேலும் அவர், புல் கொடுத்தால் மாடு பால் கொடுக்கிறது. பிஸ்கட் போட்டால் நாய் வாலாட்டி தன்னுடைய விசுவாசத்தைக் காட்டுகிறது. அதேபோல மனிதனும் அரசு செய்த உதவிக்கு நன்றியோடு இருக்க வேண்டும். என்றார். இளைஞர்களுக்கு 4 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ள செய்தியை தெரிவித்தும் கை தட்டாமல் அமைதியாக இருக்கும் உங்களுடைய சிந்தனை போக்கு மாறவேண்டும்  என பேசியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். 
இதுபோல் பேசியதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், வேலை வழங்கி செய்தியை தெரிவித்தும் அமைதியாக இருந்ததால் அந்த உத்வேகத்தில்தான் பேசியதாக குறிப்பிட்ட அமைச்சர் வேறு எந்த கெட்ட நோக்கத்தோடும் பேசவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தன் பேச்சை திரித்துக் கூறுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.