பிளஸ் 2 ஃபெயில்…  ஆனா பாக்குறது ஐபிஎஸ் வேலை…!

பிளஸ் 2 ஃபெயில்…  ஆனா பாக்குறது ஐபிஎஸ் வேலை…!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அபய் மீனா. தன்னை ஒரு போலீஸ் அதிகாரி எனக் கூறிக்கொண்டு வலம் வந்த நிலையில், அபய் மீனா போலி ஐபிஎஸ் அதிகாரி என தெரியவந்ததால் போலீசார் அவரை கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அபய் மீனா. தன்னை ஒரு போலீஸ் அதிகாரி எனக் கூறிக்கொண்டு வலம் வந்த நிலையில், அபய் மீனா போலி ஐபிஎஸ் அதிகாரி என தெரியவந்ததால் போலீசார் அவரை கைது செய்தனர்.

சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக செயல்பட்டு வந்த இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என மாணவர்களுக்கு ஆலோசனையும் வழங்கியிருக்கிறார். அத்துடன் தன் வாகனத்தில் போலி அரசு முத்திரையையும் பதிவு செய்திருக்கிறார்.

அபய் மீனாவின் போலி ஐடி கார்டில் Branch என்பதற்கு பதிலாக Branche என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனையடுத்து நிஜ போலீசாருக்கு அபய் மீனாவின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்பட அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் ஐபிஎஸ் அதிகாரி இல்லை என தெரியவந்தது. விசாரணையில் அபய் மீனா 12-ஆம் வகுப்பில் தேர்ச்சியே பெறாதவர் என்பது தெரியவந்திருக்கிறது.