பில்லா பாண்டி நல்லா இல்லேன்னு எப்புடி சொல்லலாம்? உன் கூட டூ

 

பில்லா பாண்டி நல்லா இல்லேன்னு எப்புடி சொல்லலாம்? உன் கூட டூ

நடிகர் சங்க செயலர், தயாரிப்பாளர் சங்க தலைவர், அனிஷாவின் காதலர், ஆம்பள படத்தின் ஹீரோ இப்படி பல போஸ்டிங்குகளை வச்சுக்கிட்டு கண்டமேனிக்கு அலையும் விஷாலுக்கு இப்போ சிக்கலோ சிக்கல். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் சங்கத்திலும் அதன்பிறகு தயாரிப்பாளர் சங்கத்திலும் விஷாலின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தனர் அவருடைய நண்பர்கள் பலர்

நடிகர் சங்க செயலர், தயாரிப்பாளர் சங்க தலைவர், அனிஷாவின் காதலர், ஆம்பள படத்தின் ஹீரோ இப்படி பல போஸ்டிங்குகளை வச்சுக்கிட்டு கண்டமேனிக்கு அலையும் விஷாலுக்கு இப்போ சிக்கலோ சிக்கல். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் சங்கத்திலும் அதன்பிறகு தயாரிப்பாளர் சங்கத்திலும் விஷாலின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தனர் அவருடைய நண்பர்கள் பலர். இரண்டிலும் வென்று சங்கத்தை பிடித்தப்பிறகு, நண்பர்களின் சங்கைப்பிடிப்பார் என அவர்கள் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

rkl

தயாரிப்பாளர் சங்கத்தை அரசாங்கம் கையகப்படுத்திக்கொண்டு, அடுத்த தேர்தலுக்கான முஸ்தீபுகளில் இறங்கிவிட்டது. கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் நம் படைகொண்டு போர் நடத்தி வெற்றி பெறலாம் என ஆலோசனையில் இறங்க தன் தளபதிகளை விஷால் தேட ஆரம்பிக்கும்போதுதான் அவருக்கு தெரிய வந்திருக்கிறது அவர் இந்த முறை போர் செய்வதே தன் தளபதிகளை எதிர்த்துத்தான் என்று. 

rk

நடிகர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷும் அவர்களில் ஒருவர். “வருகிற தேர்தலில் விஷாலை எதிர்த்து போட்டியிடப் போகிறீர்களா என பத்து நாளைக்கு முன் சுரேஷிடம் கேட்டிருந்தால்,  இல்லை என்பதாகத்தான் பதில் இருந்திருக்கும். ஆனால், இப்போ சமீபத்தில், அவருடைய பில்லா பாண்டி படம் கன்டென்ட் இல்லாததால்தான்  ஓடவில்லைன்னு விஷால் ஒரு பேட்டியில சொல்லப்போக, தயாரிப்பாளர் சங்கத்தில் தன்கென்று ஒரு அணி, தன‌கென்று ஒரு கொடி, முடிந்தால் என்னை வென்று  பாருங்கள் என தனி அணியாக கிளம்பி விட்டார் சுரேஷ்.