பிற ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் சேவைக் கட்டணம் பிடிக்கப்படாது – எஸ்.பி.ஐ. வங்கி

 

பிற ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் சேவைக் கட்டணம் பிடிக்கப்படாது – எஸ்.பி.ஐ. வங்கி

25,000 ரூபாய் வரை மாதாந்திர இருப்புத் தொகை சராசரி கொண்ட சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் மாதம் 5 முறை (பண எடுப்பது மட்டுமின்றி இதர பயன்பாடுகளும் சேர்த்து) கட்டணம் இல்லாமல் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம். 25 ஆயிரத்துக்கு மேல் மாதாந்திர இருப்புத் தொகை சராசரி கொண்டிருந்தால் எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆறு மெட்ரோ நகரங்கள் தவிர மற்ற நகரங்களில் அனைத்து வாடிக்கையாளரும் பிற வங்கிகளின் ஏடிஎம் மூலம் மாதத்துக்கு 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்க அனுமதி உண்டு. மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய மெட்ரோ நகரங்களில் மாதத்துக்கு 3 முறை மட்டும் வேறு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம். இதுவே ஸ்டேட் வங்கியின் விதிமுறை.

SBI

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அன்றாட தேவைகளுக்கே பணமில்லாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பல இடங்களில் வங்கிகள் 2 மணி வரை செயல்படுவதாலும் கட்டுப்படுத்த பகுதிகளில் வங்கிகள் செயல்படாததாலும் மக்கள் செய்வதறியாது திணருகின்றனர். இதனால், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வரம்பை மீறி எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திலோ அல்லது பிற ஏடிஎம்களிலோ பணம் எடுத்தால் சேவைக் கட்டணம் பிடித்தம் செய்யப்படமாட்டாது என்றும் இந்த சலுகை ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் அறிவித்துள்ளது.