பிரேசில் பியூட்டிபுல் பிரேசில் ! சுற்றுலா செல்ல விசா தேவையில்லை !

உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கவும், இந்தியா மற்றும் சீன நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா தேவையில்லை என பிரேசில் நாடு தெரிவித்துள்ளது.
பிரேசில் நாட்டின் அதிபராக இந்த ஆண்டு ஜெயிர் பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றபிறகு முதல் முதலாக சீன நாட்டிற்கு செல்லும் பிரேசில் அதிபர் ஜெயிர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வளர்ந்து வரும் நாடுகள் என்ற அடிப்படையில் சீனா மற்றும் இந்தியாவுக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஜெயிர்.

brazil

பிரேசில் அதிபராக பொறுப்பேற்றவுடன் அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா எடுக்க வேண்டியதில்லை என்ற அறிவிப்பை வெளியிடிருந்தார் ஜெயிர். இந் நிலையில் இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கும் இந்த சலுகை அறிவித்திருப்பது சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பை பெற்றுள்ளது.

no visa

பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ, சாவ் பாவ்லோ, சல்வாடோர், பிரேசிலா ஆகிய இடங்கள் முக்கிய சுற்றுலா தலங்கள் ஆகும். சமீபத்தி புள்ளி விவரப்படி 2015ம் ஆண்டு மட்டும் 6.36 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பிரேசில் நாட்டுக்கு சென்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.