பிரேக் இல்லாமல் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் தனுஷ்.. தொடங்கியது “டி 41” ஷூட்டிங்.. வைரல் போட்டோஸ் !

 

பிரேக் இல்லாமல் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் தனுஷ்.. தொடங்கியது “டி 41” ஷூட்டிங்.. வைரல் போட்டோஸ் !

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மாறி செல்வராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று திருநெல்வேலியில் தொடங்கியுள்ளது.

நடிகர் தனுஷின் நடிப்பில் சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது வரை தனுஷ் நடத்ததிலேயே இந்த படம் தான் பெஸ்ட் என்று அவரது ரசிகர்கள் தாறுமாறாகக் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

ttn

அதன் பிறகு, சில ஆண்டுகளாக ஷூட்டிங் முடிந்து கிடப்பில் கிடந்த என்னை நோக்கிப் பாயும் தோட்டா படம் ரிலீஸ் ஆனது. இதனிடையே, கார்த்திக் சுப்புராஜ்  இயக்கத்தில் உருவாகி வந்த ‘டி40’ என்னும் படத்தின் ஷூட்டிங்கை தனுஷ் டிசம்பர் 30 ஆம் தேதி முடித்துக் கொடுத்தார். 

TTN

அதன் பிறகு, துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பட்டாஸ் படம் வரும் ஜனவரி 16 ஆம் தேதி ரிலீஸ் ஆகஉள்ளது. அந்த படத்தில் அப்பா தனுஷுக்கு ஜோடியாக சினேகாவும் மகன் தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சடாவும் நடித்துள்ளனர். இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடப்பில் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ள “தர்பார்” பட ரிலீஸுக்கு மறு வாரமே ரிலீஸ் ஆகவுள்ளது. 

TTN

அடுத்தடுத்து படங்களைக் கொடுத்து வரும் தனுஷ், ‘டி41’ என்னும் படத்தின் ஷூட்டிங்கில் தற்போது பிசியாக உள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மாறி செல்வராஜ் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று திருநெல்வேலியில் தொடங்கியுள்ளது. இந்த படம் மாஞ்சோலை படுகொலை, தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டது. இந்த படத்தில் மலையாள நடிகை ரஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்றும் பிரபல மலையாள நடிகர் லால் மற்றும் நட்டிநடராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகின்றன. 

TTN

திருநெல்வேலியில் நடைபெற்று வரும் டி41 படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களில் , தனுஷின் புதிய லுக் ரசிகர்களின் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து, தனுஷ் இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், மித்ரன் ஜவஹர் இயக்கத்திலும் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி வருகின்றன. தனுஷின் கால் ஷீட்டை கேட்டா.. நமக்கே தல சுத்துது ல..