“பிரியாணி சாப்பிட கூடாது”…ஆத்திரத்தில் மருத்துவமனை கண்ணாடியை உடைத்த கொரோனா நோயாளி!

 

“பிரியாணி சாப்பிட கூடாது”…ஆத்திரத்தில் மருத்துவமனை கண்ணாடியை உடைத்த கொரோனா நோயாளி!

காலை, மதியம், இரவு, ஆகிய நேரங்கள் கீரை உள்ளிட்ட சத்தான உணவு வகைகளை மருத்துவமனை நிர்வாகம் வழங்கி வருகிறது.

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று உள்ள 117 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொரோனா சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு காலை, மதியம், இரவு, ஆகிய நேரங்கள் கீரை உள்ளிட்ட சத்தான உணவு வகைகளை மருத்துவமனை நிர்வாகம் வழங்கி வருகிறது.

tt

இந்நிலையில்  போத்தனூரை சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்ட 28 வயது  நபர் சிகிச்சை பெற்று வருகிறார்.  இவருக்கு இவரின்  மனைவி பிரியாணி செய்து கொண்டு வந்து கொடுத்துள்ளார். சார்ந்த கொரோனா உறுதி செய்யப்பட்ட 28 வயது நபரின் மனைவி அவருக்காக பிரியாணி செய்து கொண்டு வந்துள்ளார்.   இதை சாப்பிட வேண்டும் என்று இளைஞர் அடம்பிடிக்க மருத்துவமனை நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மருத்துவமனை கண்ணாடியை கையால் அடித்து உடைத்துள்ளார்.

tt

இதுகுறித்து  சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கண்ணாடியை உடைத்த போத்தனூர்  இளைஞர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது சொத்தை சேதப்படுத்துதல், உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.