பிரியாணிக்கு ‘மசாலா’ விக்குறது ஒரு தப்பாய்யா?: சிவசேனா ரவுசு தாங்கமுடியலப்பா

 

பிரியாணிக்கு ‘மசாலா’ விக்குறது ஒரு தப்பாய்யா?: சிவசேனா ரவுசு தாங்கமுடியலப்பா

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுவையான பிரியாணி மசாலை விற்ற கடைக்காரரிடம் சிவசேனா கட்சியினர் அடாவடியாக தகராறு செய்ததால் பதற்றம் நிலவியது.

மும்பை: பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுவையான பிரியாணி மசாலை விற்ற கடைக்காரரிடம் சிவசேனா கட்சியினர் அடாவடியாக தகராறு செய்ததால் பதற்றம் நிலவியது.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பிரபல நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து பொருள்களை வாங்கிச் செல்வார்கள். இங்கு பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட பிரியாணி மசாலாவை இறக்குமதி செய்து விற்கிறார்கள். இது பற்றி தகவல் அறிந்த  சிவசேனா கட்சியை சார்ந்த நபர்கள் சிலர், அந்த சூப்பர்மார்க்கெட்டின் முன்பு அமர்ந்து, முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டம் நடத்தினர். 
இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீஸார், இதுபற்றி சூப்பர்மார்க்கெட் நிர்வாகத்திடம் பேசி விற்பனையை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக சிவசேனாவினரிடம் வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.