பிரியங்கா ரெட்டி கொலை வழக்கு: உடல் கண்டெக்கப்பட்ட இடத்தில் சிதறிக்கிடந்த விந்தணுக்கள்…டிஎன்ஏ அறிக்கையில் நிரூபிக்கப்பட்ட உண்மை!

 

பிரியங்கா ரெட்டி கொலை வழக்கு: உடல் கண்டெக்கப்பட்ட இடத்தில் சிதறிக்கிடந்த விந்தணுக்கள்…டிஎன்ஏ அறிக்கையில்  நிரூபிக்கப்பட்ட உண்மை!

சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற  முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா  ஆகிய நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த 6ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில்  அவர்கள் தப்பியோட முயன்றதால்  சுட்டுக்கொன்றதாக  சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

priyanka

அதேசமயம் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தாமல்  காவல்துறை என்கவுண்டரில்  சுட்டு கொன்றது வன்முறை என்று ஒருதரப்பினர் வாதிட்டு வருகின்றனர். இதனிடையே நீதிமன்ற உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவை முழுவதும் வீடியோவாக எடுக்கப்பட்டது.

ttn

இதையடுத்து நான்கு பேர் தான் குற்றவாளிகள் என்பதை டிஎன்ஏ சோதனை மூலம் நிரூபிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது.இந்நிலையில்  டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பெண்கள் கால்நடை மருத்துவரின் டி.என்.ஏ அறிக்கை வியாழக்கிழமை வந்துள்ளது. அறிக்கையில் எரிந்த சடலம் ஒரு பெண் மருத்துவருக்குச் சொந்தமானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, மேலும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் டி.என்.ஏவும் அதனுடன் பொருந்தியுள்ளது. அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட விந்தணுக்கள்  நான்கு குற்றவாளிகளுக்குச் சொந்தமானது என்பதும் டிஎன்ஏ விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பெண் மருத்துவரின் உடலின் எலும்புகள் டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. கூடுதலாக, பாதிக்கப்பட்டவரின் ஆடைகளிலிருந்து விதை மாதிரிகள் எடுக்கப்பட்டன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.