பிரியங்கா காந்தியின் வருகைக்கு அகிலேஷ் ஆதரவு: உ.பி.யில் மாறும் அரசியல் காட்சிகள்?

 

பிரியங்கா காந்தியின் வருகைக்கு அகிலேஷ் ஆதரவு: உ.பி.யில் மாறும் அரசியல் காட்சிகள்?

பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்பதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

லக்னோ: பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்பதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

தேசிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் மகளும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி, உத்தரபிரதேச கிழக்கு பிராந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

உ.பி.யில் அகிலேஷின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன்சமாஜ்ன் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால், நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.  

ஆகையால், உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவே இந்த முடிவை ராகுல் எடுத்திருப்பதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்பதாகவும், அவருக்கு பொறுப்பு வழங்கிய ராகுல் காந்தியை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இளைஞர்கள் அரசியலில் நுழைவதை சமாஜ்வாதி எப்போதும் வரவேற்கும் என்றும் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.