பிரிந்தது திஷா படாணி – டைகர் ஷெராஃப் ஜோடி!

 

பிரிந்தது திஷா படாணி – டைகர் ஷெராஃப் ஜோடி!

தங்கள் காதல் முறிவை முறைப்படி அறிவிப்பார்களா என்று கேட்டால், காதலையே அறிவிக்காதபோது, முறிவை மட்டும் எப்படி அறிவிப்பார்கள் என்று முறைக்கிறார்கள் இருவீட்டர் சம்பந்தப்பட்டவர்கள்.

பாலிவுட்டின் இளம்சூடான ஜோடிகளில் குறிப்பிடத்தகுந்தது திஷா – டைகர் ஜோடி. பெஃபிர்கா என்ற மியுசிக் ஆல்பத்தில்தான் இருவரும் முதலில் இணைந்து ஆடினார்கள். அதன்பின் வெள்ளித்திரையில் இணைந்தது பாகி – 2 படத்திற்காக. கட்டுடல் காளை டைகருக்கும், கிறங்கடிக்கும் அழகி திஷாவுக்கும் திரையிலும் திரைக்குப் பின்னாலும், கெமிஸ்ட்ரி உள்ளிட்ட‌ பிளஸ் 1 பாடப்புத்தகங்கள் அனைத்தும் பச்செக்கென பொருந்திப்போனதால், இருவரும் காதலர்களானதில் ஆச்சர்யம் இல்லை.

Disha Patani - Tiger Sheroff

வெவ்வேறு படங்களின் ஷூட்டிங்கில் இருந்தாலும், இருவரையும் அடிக்கடி பொது இடங்களில் ஒன்றாக திரிவதுண்டு. நெருக்கமாக பழகியிருந்தாலும், தங்களுடைய காதல்பற்றி பொதுவெளியில் ஆம் என்றோ இல்லை என்றோ இருவரும் கூறியதில்லை. யார் கண்பட்டதோ தெரியவில்லை. இருவரும் தற்போது காதலர்கள் என்ற நிலையில் இருந்து ஒரு படி கீழே இறங்கி நண்பர்களாக மட்டும் இருந்துகொள்ள முடிவுசெய்துள்ளதாக தெரிகிறது. சரி, தங்கள் காதல் முறிவை முறைப்படி அறிவிப்பார்களா என்று கேட்டால், காதலையே அறிவிக்காதபோது, முறிவை மட்டும் எப்படி அறிவிப்பார்கள் என்று முறைக்கிறார்கள் இருவீட்டர் சம்பந்தப்பட்டவர்கள்.