பிரிட்டிஷ் இளவரசர் கொரோனாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்தாரா? – இங்கிலாந்து மறுப்பு

பிரிட்டிஷ் இளவரசர் கொரோனாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்தாரா? – இங்கிலாந்து மறுப்பு

பிரிட்டிஷ் இளவரசர் கொரோனாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்ததாகவும் இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்ததாகவும் வெளியான தகவல் தவறானது என்று இங்கிலாந்து இளவரசரின் செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

charles-89

இந்திய சுகாதாரத் துறையின் ஆயுஷ் அமைச்சகம் நேற்று ஒரு ட்வீட் பதிவை வெளியிட்டிருந்தது. அதில், பிரதமர் மோடி இங்கிலாந்து இளவரசர் சார்லஸை தொடர்புகொண்டு அவரது உடல் நலம் பற்றி விசாரித்ததாகவும், தன்னுடைய நலம் பற்றி எப்போதும் அக்கறை கொண்டுள்ள பிரதமர் மோடிக்கும், எப்போதும் எடுத்துவரும் ஆயுர்வேத சிகிச்சைக்கும் நன்றி கூறியதாக தெரிவித்திருந்தது. இதனால், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், கொரோனாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டார் என்று செய்திகள் வெளியாகின.

இதை இளவரசர் சார்லசின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “கொரோனாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்ததாக வெளியான தகவல் உண்மையில்லை. இளவரசர் இங்கிலாந்தின் தேசிய மருத்துவ சேவை (என்.எச்.எஸ்) மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றி வருகிறார், இது தவிர வேறு எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார்.