பிராமணர்களை உயர்வாக பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நெருக்கடி

 

பிராமணர்களை உயர்வாக பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நெருக்கடி

பிராமணர்களை உயர்வாக பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் கருத்தை பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் அவர் பதவி விலக வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிராமணர்கள் சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட சில போட்டாக்களை தனது டிவிட்டரில் போஸ்ட் செய்து இந்தியில் கருத்துக்களை பதிவு செய்து இருந்தார். அதில், சமூகத்தில்  எப்போதும் பிராமணர்கள் உயர் நிலையில் இருக்கிறார்கள். அவர்களின் தியாகம் மற்றும் கடினை உழைப்பே உயர்ந்த நிலைக்கு காரணம். இந்த காரணத்தால்தான் பிராமணர்கள் எப்போதும் தலைமை தாங்குபவர்களாக உள்ளனர் என பதிவு செய்து இருந்தார்.

கோயில் திருவிழா

ஓம் பிர்லாவின் இந்த டிவிட்டுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஓம் பிர்லாவின் கருத்தை விமர்சனம் செய்ததுடன் சில அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபலும் சபாநாயகர் ஓம் பிர்லாவின் டிவிட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கபில் சிபல்

கபில் சிபல் தனது டிவிட்டரில், பிராமணர்கள் பிறப்பால் மதிக்கப்படுகிறார்கள் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகிறார். இந்த மனநிலையே சாதிகள் நிறைந்த சமத்துவமற்ற இந்தியாவை உருவாக்குகிறது. நாம் பிர்லாஜியை மதிக்கிறோம் அவர் பிராமணர் என்பதால் அல்ல அவர் நமது மக்களவை சபாநாயகர் என்பதால்  என டிவிட் செய்து இருந்தார்.