பிரான்ஸ் அதிபர் மாளிகையை அலங்கரிக்கும் இந்திய பைக்!

பிரான்ஸ் அதிபர் மாளிகையை அலங்கரிக்கும் இந்திய பைக்!

பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் பைக், கார்கள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் அவற்றுக்கு மதிப்பு கிடைக்கிறதோ இல்லையோ சர்வதேச அளவில் அவை மதிப்பு பெற்றதாகவே உள்ளன.

பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் பைக், கார்கள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் அவற்றுக்கு மதிப்பு கிடைக்கிறதோ இல்லையோ சர்வதேச அளவில் அவை மதிப்பு பெற்றதாகவே உள்ளன.
மஹிந்திரா நிறுவனம் உருவாக்கிய மின்சார மோட்டார் சைக்கிள்களை பிரான்ஸ் அதிபர் அலுவலகமே வாங்கி பயன்படுத்தியுள்ளது. அதிபர் மாளிகையில் இந்திய பைக்குகள் செல்வது இந்தியர்களுக்குப் பெருமையான விஷயமாக பார்க்கப்படுகிறது.

scooter

மஹிந்திரா நிறுவனத்தின் துணை நிறுவனமான பியூஜியாட் மின்சாரத்தில் இயங்கும் இ-லுடிக்ஸ்  என்ற பைக்குகளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் பீதம்பூரில் தயாரிக்கப்படும் இந்த பைக்குகள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிரான்ஸ் அதிபர் மாளிகையில் சுற்றுச்சூழல் மாசைத் தவிர்க்கும் வகையில் பெட்ரோல் வண்டிகளுக்கு பை பை சொல்லப்பட்டு இந்த புதிய மின்சார மோட்டார் சைக்கிள்களை வாங்கியுள்ளனர்.

scooter

பல்வேறு துறைகளுக்கு இடையே கோப்பு பரிமாற்றத்தின்போது, விரைவாக கொண்டு சேர்க்க ஊழியர்கள் இந்த பைக்குகளை பயன்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த பைக் மூன்று கிலோ வாட் திறன் கொண்டதாகும். மணிக்கு 45 கி.மீ வேகத்தில் இது பயணிக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கி.மீ வரை இந்த பைக் ஓடும். பல்வேறு நவீன வசதிகளும் இந்த பைக்கில் உள்ளதாக கூறப்படுகிறது.