பிரமிப்பூட்டும் கலாச்சாரம்… !பெரியவர்களை வரவேற்பதில் இத்தனை வகைகளா… ?

 

பிரமிப்பூட்டும் கலாச்சாரம்… !பெரியவர்களை வரவேற்பதில் இத்தனை வகைகளா… ?

நாம் யாரவது புது நபரை சந்தித்தால் இரண்டு கைகையும் கூப்பி ‘வணக்கம்’ என்று சிரித்த முகத்தோடு அவர்களை வரவேற்போம்.பிரபலங்கள், சாதனையாளர்கள் என்றால் சற்றே முதுகை வளைத்து பவ்யம் காட்டுபவர்களும் உண்டு.வட இந்தியாவில் பெரும்பாலும் ‘நமஸ்தே..ஜீ’ என்பார்கள்.இப்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் வரவேற்பதிலும் வாழ்த்து சொல்வதிலும் வெவ்வேறு முறைகள் உண்டு.சரி,உலகம் முழுக்க எப்படி வாழ்த்து சொல்கிறார்கள்,வரவேற்கிறார்கள் என்று நெட்டில் ஒரு தேடுதல் வேட்டை நடத்தினால் ஏகப்பட்ட சுவாராஸ்யங்கள் கொட்டிக்கிடக்கின்றன! 

நாம் யாரவது புது நபரை சந்தித்தால் இரண்டு கைகையும் கூப்பி ‘வணக்கம்’ என்று சிரித்த முகத்தோடு அவர்களை வரவேற்போம்.பிரபலங்கள், சாதனையாளர்கள் என்றால் சற்றே முதுகை வளைத்து பவ்யம் காட்டுபவர்களும் உண்டு.வட இந்தியாவில் பெரும்பாலும் ‘நமஸ்தே…ஜீ’ என்பார்கள்.இப்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் வரவேற்பதிலும் வாழ்த்து சொல்வதிலும் வெவ்வேறு முறைகள் உண்டு.சரி,உலகம் முழுக்க எப்படி வாழ்த்து சொல்கிறார்கள், வரவேற்கிறார்கள் என்று நெட்டில் ஒரு தேடுதல் வேட்டை நடத்தினால் ஏகப்பட்ட சுவாராஸ்யங்கள் கொட்டிக்கிடக்கின்றன! 
சாம்பிளுக்கு சிலது மட்டும் இங்கே தொகுத்திருக்கிறோம்.

1.பௌவிங்:

பொதுவாகவே நம்ம ஊர் என்றில்லை, ஆசிய நாடுகளான இந்தியா,ஜப்பான், கம்போடியா, தாய்லாந்தில் போன்ற நாடுகளில் நம்ம ஊரில் பின்பற்றுவது போலவே தலையை சற்றே சாய்த்து வணக்கம்… நமக்கு வணக்கம் என்பதுபோல்  அவர்கள் மொழியில் வணக்கம் சொல்கிற வழக்கத்தையே  பின்பற்றுகிறார்கள். நம்ம ஊரில் இப்போதைய சூழலில் இதெல்லாம் எதிர் பார்க்க முடியாது என்பது வேறு விசயம் .அத்தி பூத்தார் போல் நெகிழ வைக்கிற அளவுக்கு மரியாதை கொடுக்கிற இளசுகளும் இருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.ஜப்பானில் உள்ளங்கைகளை ஒன்றுசேர்த்து தலையை சற்று அதிகம் குனிவது வழக்கம். மேலும் அந்நாட்டு பெண்கள் தங்கள் கைகளை தங்கள் தொடைகளில் வைத்தவாறு தலையை குனிவர். இது மிகுந்த மரியாதையை வெளிப்படுத்துவது என கூறப்படுகிறது.

bowing

2.பெரியவர்களுக்கு மரியாதை வழங்குவது:

நம்மூரில் பெரியர்வர்களின் கால்களில் விழுவது மிகுந்த மரியாதையை குறிக்கும். ஆனால் மேற்கத்திய நாடுகளில் இந்த வழக்கத்தை வித்தியாசமாக பார்த்தாலும் காலம் காலமாக இந்த வழக்கமே இப்போதும் நடைமுறையில்  உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு இளைய நபர் பெரியவர்களின் நெற்றியில் கை வைத்து, மெதுவாக அழுத்துவது மிகுந்த மரியாதையாக கருதப்படுகிறது! ஆப்பிரிக்கா நாடுகளில் சிறியவர்கள் பெரியவர்களின் கால்களில் விழுந்து தங்கள் மரியாதையை தெரியப்படுத்துகிறார்கள்.

fall in leg

3.நாக்கை ஒட்டிக்கொள்வது!:

திபெத்தில் பிறரை வணங்குவதற்கு  மிகவும் வித்தியாசமான முறையை கையாளுகின்றனர். அவர்கள் தங்கள் நாக்குகளை வெளியே காட்டி வாழ்த்து தெரிவிப்பர்! இது திபெத் நாட்டு துறவிகளிடமிருந்து தோன்றியது! திபெத்தில் ஒரு கெட்ட அரசர் இருந்ததாகவும் அவருக்கு கருப்பு நாக்கு இருந்ததாகவும் அதனால் அந்நாட்டு மக்கள் தங்கள் நாக்குகளை வெளியே காட்டி நாங்கள் அந்த அரசரை போல கெட்டவர்கள் இல்லையென தெரிவிக்கும் நோக்காக இப்படி நாக்குகளை வெளியே காட்டுகின்றனர்! 

Join lips

4.முகங்களை தடவிக்கொள்ளுதல்:

இது கேட்பதற்கே  ஒரு மாதிரியாக இருந்தாலும் நியூஸிலாந்தில் இப்படி தான் பிறரை வணங்குகிறார்கள்.! மஓரி என்ற பழங்குடிகள் தங்கள் முகங்களை ஒருவருக்கொருவர்  தடவிகிகொள்ளுகிறார்கள் இது சுவாசத்தை பகிர்ந்துக்கொள்ளுதல்! இது அவர்கள் வரவேற்பு முறையாகும். ஆனால் இம்முறை அனைவருக்கும் செய்யப்படுவதன்று! 

newzealand-greeting

5. கைதட்டுதல்:

கைதட்டி வரவேற்பதா!? இப்படியும் ஒரு முறையுள்ளதை அறிவீர்களா? ஆம் இப்படிதான் ஜிம்பாப்வேயில் வரவேற்கிறார்கள்! இங்கு ஒருவர் கைதட்ட மற்றொருவர் 2 முறை கைதட்டி பதிலளிப்பார். பெண்கள் வெவ்வேறு கோணங்களில் கைகளை தட்டுவார், ஆனால் ஆண்கள் விரல்களையும் கையையும் ஒரே சீராக  வைத்து கைதட்டுவர். 

vlap

பாருங்கள் உலகம் முழுக்க மரியாதை செலுத்துவதில் எவ்வளவு வித்யாசங்கள் இருக்கிறதென்று ! நம்ம ஊரில் இப்போதிருக்கிற  2 கே கிட்ஸ் காதுல இருக்கிற ஹெட்  செட்டை லேசாக கழட்டுனாலே மிகப்பெரிய மரியாதை கொடுத்துவிட்டதாக நினைக்கிறார்கள்.இந்தாளுக்கெல்லாம் இதுவே அதிகம் என்று குறைபட்டுக்கொள்கிற பசங்களும் இருக்கிறார்கள்.சில ஊர்களில் “இந்தக் காலத்து பசங்ககிட்ட மரியாதையைக் கூட கேட்டு வாங்க வேண்டி இருக்கு.. என்னத்த சொல்ல!” என்று பெருசுகள் அங்கலாய்ப்பதைக் கேட்டிருப்பீர்களே… என்னத்த சொல்ல ..!?