பிரபல பேராசிரியர் நிர்மலா தேவியை மிரட்டிய தாடி வைத்த அமைச்சர் – பரபரப்பு குற்றச்சாட்டு

 

பிரபல பேராசிரியர் நிர்மலா தேவியை மிரட்டிய தாடி வைத்த அமைச்சர் – பரபரப்பு குற்றச்சாட்டு

கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு செல்லும்படி கூறிய பேராசிரியை நிர்மலா தேவியை மதுரையைச் சேர்ந்த தாடிவைத்த அமைச்சர் ஒருவர் ஆசீட் ஊற்றி கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கல்லூரி மாணவிகளை தமிழகத்தின் மிக உயர்ந்த பதவியில் உள்ள ஒரு பிரபலத்துக்கு அறிமுகம் செய்து வைத்து, அவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து வெளியே வந்த அவர், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல நடந்துகொண்டார்.

கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு செல்லும்படி கூறிய பேராசிரியை நிர்மலா தேவியை மதுரையைச் சேர்ந்த தாடிவைத்த அமைச்சர் ஒருவர் ஆசீட் ஊற்றி கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

nirmala devi

கல்லூரி மாணவிகளை தமிழகத்தின் மிக உயர்ந்த பதவியில் உள்ள ஒரு பிரபலத்துக்கு அறிமுகம் செய்து வைத்து, அவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து வெளியே வந்த அவர், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல நடந்துகொண்டார். இந்த நிலையில், நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையின்போது ஆஜராகவில்லை என்று கூறி அவரது ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் நிர்மலா தேவியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதற்கு நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பசும்பொன் பாண்டியன் கூறுகையில், “நேற்று இரவு நிர்மலா தேவி என்னிடம் பேசினார். அவரை இன்று நீதிமன்றத்தில் சரண் அடையும்படி கூறினேன். அவரும் காலை நேரில் ஆஜராவதாக தெரிவித்தார். ஆனால், அவர் வரும் வழியில் மறித்து, கைது செய்து மிகப்பெரிய கடத்தல்காரர் போல அவரை போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர். 

nimala devi

நிர்மலா தேவிக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் வந்துகொண்டே உள்ளது. மதுரையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனால் உன் குடும்பத்தை சீரழித்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும், குடும்பத்தினர் மற்றும் நிர்மலா தேவி மீது ஆசிட் ஊற்றி கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் தெரிவித்தார். இதனால்தான் அவர் ஆஜராகாமல் பயந்துபோய் இருந்துள்ளார். தற்போது, அவரை கைது செய்திருப்பது பல சந்தேகங்களை எழுப்பியள்ளது” என்றார்.
கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் யார் என்று நிருபர்கள் கேட்டபோது, “மதுரையைச் சேர்ந்த அமைச்சர் அவர். வருடத்தின் பாதி நாட்கள் சாமியார் போல தாடி வைத்துக்கொண்டு இருப்பார். மீதி நாட்கள் சாதாரணமாக இருப்பார்” என்று குறிப்பிட்டார்.
மதுரையைச் சேர்ந்த அமைச்சர்கள் என்றால் செல்லூர் ராஜு மற்றும் உதயகுமார்தான். இதில் யார் பாதி நாட்கள் தாடி வைத்திருப்பார்கள் என்பது ஊருக்கே தெரியும். இந்த பேட்டி குறித்து போலீஸ் நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.