பிரபல சீரியல் நடிகை மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்!

 

பிரபல சீரியல் நடிகை மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்!

பிரபல ஒடியா தொலைக்காட்சி நடிகை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரபல ஒடியா தொலைக்காட்சி நடிகை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை லக்ஷ்மிபிரியா பெக்ரா ஓடியா மொழியில் பிரபலமான நடிகை . இவர் ஓடியவில் நடித்த டப்ஸாயா மற்றும் எசிபி.நிகிதா சீரியல் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அதனையடுத்து அவருக்கு படங்கள் வாய்ப்பு கிடைத்தன அவர் நடிப்பில் வெளியானசொறி சொறி மன சொறிதிரைப்படம் மூலமாக இவருக்கு ரசிகர் பட்டாளம் அமைந்தது.

இந்நிலையில் விடுமுறை நாட்களைக் கழிப்பதற்காக வெள்ளிக்கிழமை கட்டாக்கில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மாடியில் இருந்த திடீரென தவறி விழுந்துள்ளார்.அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர் இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர்பிரிந்தது. அவரது மறைவு அவரது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.