பிரபல சக்சபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்!

 

பிரபல சக்சபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்!

பிரபல சாக்சபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் இன்று காலமானார். அவருக்கு வயது 69.

பிரபல சாக்சபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் இன்று காலமானார். அவருக்கு வயது 69.

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் 1949- ஆம் ஆண்டு பிறந்தவர் கத்ரி கோபால்நாத். இவர் கோபாலகிருஷ்ண ஐயர் என்பவரிடம் சாக்சபோனும், சென்னையில் பிரபல மிருதங்க இசைக்கலைஞர் டி.வி. கோபாலகிருஷ்ணனிடம் இசைப்பயிற்சியும்  பெற்றார்.

kadri gopalnath

இவரது இசை சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ, கலைமாமணி விருது எனப் பல விருதுகளைப் பெற்றார். குறிப்பாக இயக்குநர் கே.பாலசந்தரின் டூயட் படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றியிருந்தார். இதனால் அந்த படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. 

kadri gopalnath

இந்நிலையில் பிரபல சாக்சபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் உடல்நல குறைவால் கடந்த சில நாட்களாக மங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.   கத்ரி கோபால்நாத்  மறைவுக்கு  இசை கலைஞர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.