பிரபல கிரிக்கெட் வீரருக்கு சொந்தமான மதுபான ஆலையில் ஜின் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டு சானிடைசர் தயாரிக்கும் பணி தொடக்கம்!

 

பிரபல கிரிக்கெட் வீரருக்கு சொந்தமான மதுபான ஆலையில் ஜின் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டு சானிடைசர் தயாரிக்கும் பணி தொடக்கம்!

கொரோனா வைரஸ் எதிரொலியாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவுக்கு சொந்தமான மதுபான ஆலையில் ஜின் தயாரிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு சானிடைசர் தயாரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

உலகளவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை 11 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். சுமார் 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 4 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ள நிலையில் 280 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கேயும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. 

shane warne

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த கையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கையை சுத்தம் செய்ய பயன்படும் சானிடைஸர்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, தன்னுடைய மதுபான ஆலையில் ஜின் தயாரிப்பதை நிறுத்திவிட்டு, சானிடைஸர் தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளார்.