பிரபல இயக்குநரின் தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!?

 

பிரபல இயக்குநரின் தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!?

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

மும்பை: பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

karan johar

பிரபல தயாரிப்பாளர் யஷ் ஜோஹரின் மகன் இயக்குநர்  கரண் ஜோஹர். இவர் இந்தியில், குச் குச் ஹோதா ஹே, கபி குஷி கபி கம், கபி அல்விதா நா கேஹ்னா, மை நேம் இஸ் கான், ஏ தில் ஹே முஷ்கில், லஸ்ட் ஸ்டோரிஸ் உட்பட பல படங்களை இயக்கிய வெற்றி இயக்குநராவார். இயக்கம் மட்டுமல்லாது பட தயாரிப்பிலும் ஆர்வம் கொண்ட இவர் தர்மா புரொடக்ஷன்ஸ் மூலம் பட வெற்றி படங்களை தந்துள்ளார். 

karan

இந்நிலையில்  மும்பை, கிழக்கு கோரேகான் பகுதியில் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் அலுவலகம்  உள்ளது. கேமா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் உள்ள இதன் குடோனில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. முதலில் முதல் மாடியில் பற்றிய தீ, பின்னர் மற்ற இடங்களுக்கும் பரவியுள்ளது.  இதுபற்றி  தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 12 தீயணைப்பு வண்டிகள் விரைந்து தீயை போராடி அணைத்தன.

karan jihar

இந்த பயங்கர தீ விபத்தில் உயிர்ச்சேதம் இல்லையென்றாலும் ஏராளமான படப்பிடிப்பு சாதனங்கள், காஷ்ட்யூம்கள், புத்தகங்கள் நெருப்புக்கு இரையாகியுள்ளன. இருப்பினும் தீ விபத்திற்கான காரணங்கள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை.