பிரபல இசையமைப்பாளர் வீட்டில் குடுமிப்பிடி சண்டை…விவாகரத்து வரை செல்லும் காதல் ஜோடி!?

 

பிரபல இசையமைப்பாளர் வீட்டில்  குடுமிப்பிடி சண்டை…விவாகரத்து வரை செல்லும் காதல் ஜோடி!?

ஹாலிவுட்டிலும் மனுஷன் கால் பதிக்க இருப்பதால் மனைவிக்கு கூடுதல் எரிச்சலை உண்டாகியுள்ளது. 

திருமணம், விவகாரத்து இவையெல்லாம் அனைவரும் வாழ்க்கையிலும்  வந்து போனாலும் பிரபலங்களுக்கு ஏற்படும் இதுபோன்ற நிகழ்வுகள் கூடுதல் கவனத்தை பெறுகின்றன. உருகி உருகி காதலித்து ஒரே ஆண்டில் விவாகரத்தான ஜோடிகள் திரையுலகில் ஏராளம். அந்த வகையில் தற்போது இசையமைப்பாளரான  அந்த இளம் நடிகர் வீட்டில் இப்போது ஒரே சண்டையும் சச்சரவுமாக இருக்கிறதாம்.

ttn

கணவன் மனைவிக்குள் சமீப காலமாக நடக்கும் தகராறை பார்த்து வீட்டிலுள்ளவர்கள் தலையை பிய்த்துக்கொள்ளாத குறையாக இருக்கிறர்களாம். பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து விருதுகளை குவித்து வரும் இவர், நடிக்க வந்ததிலிருந்து பிரச்னை தானாம். நடிகைகளுடன் ஊர் சுற்றுவது, பார்ட்டி என குதூகலமாக இருக்கும் இவரின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே சென்றுள்ளது. சமீபத்தில் ஹாலிவுட்டிலும் மனுஷன் கால் பதிக்க இருப்பதால் மனைவிக்கு கூடுதல் எரிச்சலை உண்டாகியுள்ளது. 

ttn

இதனால் கூட்டுடா பஞ்சாயத்த என்று வீட்டில் உள்ள பெரிய தலைகளை வைத்து நியாயத்தை சொல்லியுள்ளார். இதை கேட்டு நடிகரின் மனைவியை சமாதானம் செய்த குடும்பத்தினர்  வெயிட் பண்ணுங்க எல்லாம் சரியாகிடும் என்று சமாதானம் செய்துள்ளார்களாம். இந்தாலும் எப்போது வேண்டுமானாலும் இருவரின் விவாகரத்து செய்தி காதுக்கு வரும் என்று அந்த குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்கள்.