பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை!

 

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை!

பிரதமர் நரேந்திர மோடி  இன்று கன்னியாகுமரி வருகை புரிவதால் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி: பிரதமர் நரேந்திர மோடி  இன்று கன்னியாகுமரி வருகை புரிவதால் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் இன்று தமிழகம் வருகிறார். விசாகப்பட்டினத்திலிருந்து விமானம் மூலம் பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரம் வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி செல்கிறார். பின்னர் அங்கிருந்து அரசு விழா நடைபெறும் இடத்திற்கு சாலை மார்க்கமாக காரில் செல்கிறார். 

இவ்விழாவில், மதுரை – சென்னை இடையேயான தேஜஸ் ரயில் சேவை, மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலங்களையும் மோடி  திறந்து வைக்கவுள்ளார். இதையடுத்து பணகுடி-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை, மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை ஆகியவற்றைத் தொடங்கி வைத்துப் பேசுகிறார்.விழாவில்  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

முன்னதாக பிரதமரின் வருகையொட்டி, குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகச் செய்தி பரவியதையடுத்து குமரி கடல் பகுதியில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க இன்று தடை விதிக்கப்பட்டுள்ளதாகக்  கூறப்படுகிறது.