பிரதமர் மோடி, அஜித் தோவலை கொல்ல படையை தயார் செய்யும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு- வெளிநாட்டு உளவுத்துறை எச்சரிக்கை

 

பிரதமர் மோடி, அஜித் தோவலை கொல்ல படையை தயார் செய்யும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு- வெளிநாட்டு உளவுத்துறை எச்சரிக்கை

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு பதிலடியாக, பிரதமர் மோடி மற்றும் அஜித் தோவலை கொல்ல ஒரு படையை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு தயார் செய்து வருவதாக வெளிநாட்டு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு அண்டு காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படைகளின் அதிரடி நடவடிக்கைகளால் ஜெய்ஷ் இ முகமதுவின் முக்கிய செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டனர். பாலகோட் தீவிரவாத முகாமில் இந்திய விமான படை நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட அவமானம். மேலும், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கியது போன்ற காரணங்களால் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு கடும் கோபத்துடன் கொதிப்பில் உள்ளது.

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள்

இதற்கு பதிலடியாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை கொலை செய்ய ஒரு படையை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு தயார் செய்து வருகிறது. இந்த பரபரப்பான தாக்குதலை நடத்துவதற்காக ஜெய்ஷ் இ முகமதுவுடன் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. கூட்டு சேர்ந்து காய்களை நகர்த்தி வருகிறது. ஜெய்ஷ் இ முகமதுவின் செயற்பாட்டாளர் ஷாம்ஷேர் வானிக்கும் அவரது உதவியாளருக்கும் இடையிலான கடித தொடர்பை இடைமறித்த பார்த்த வெளிநாட்டு உளவுத்துறை, அதன் மூலம் செப்டம்பரில் இந்தியாவில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதை தெரிந்து கொண்டது. உடனே அந்த தகவலை உளவுத்துறை நமது அரசுக்கு தகவல் கொடுத்தது.

அஜித் தோவல்

வெளிநாட்டு உளவுத்துறையின் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கையை அடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கான பாதுகாப்பை விவரங்களை பாதுகாப்பு படைகள் மறுஆய்வு செய்துள்ளன. மேலும், ஜம்மு, பதான்கோட், ஜெய்ப்பூர், அமிர்தரசரஸ், காந்தி நகர், கான்பூர் மற்றும லக்னோ உள்பட 30 நகரங்களின் போலீசாருக்கு தீவிரவாத எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.