பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவான தொகை எவ்வளவு தெரியுமா?

 

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவான தொகை எவ்வளவு தெரியுமா?

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் செலவான தொகை குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் செலவான தொகை குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்வது பற்றி பரவலாக விமர்சனம் எழுந்து வருகிறது. இதற்கிடையில் பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்கு ஆகும் செலவு குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் பதில் அளித்துள்ளார்.

ttn

அதன்படி 2015-16 காலகட்டத்தில் ரூ.121.85 கோடியும், 2016-17 காலகட்டத்தில் ரூ.78.52 கோடியும், 2017-18 காலகட்டத்தில் ரூ.99.90 கோடியும், 2018-19 காலகட்டத்தில் ரூ.100.02 கோடியும், 2019-20 காலகட்டத்தில் ரூ.46.23 கோடியும் செலவாகியுள்ளது. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு ஆன மொத்த செலவு ரூ.446.52 கோடி ஆகும்.