பிரதமர் மோடிக்கு அமைதிக்கான விருது, தூய கங்கை திட்டத்துக்கு 200,000 டாலர்கள் பரிசு

 

பிரதமர் மோடிக்கு அமைதிக்கான விருது, தூய கங்கை திட்டத்துக்கு 200,000 டாலர்கள் பரிசு

தென்கொரியா பயணம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அமைதிக்கான விருதும், தூய கங்கை திட்டத்துக்கு 200,000 டாலர்கள் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

சியோல்: தென்கொரியா பயணம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அமைதிக்கான விருதும், தூய கங்கை திட்டத்துக்கு 200,000 டாலர்கள் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

தென்கொரியா பயணம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அமைதிக்கான விருதும், தூய கங்கை திட்டத்துக்கு 200,000 டாலர்கள் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. விருதினை பெற்றுக்கொண்ட மோடி, இந்த விருதை இந்திய மக்களுக்கு சமர்பிக்கிறேன். தீவிரவாதம் உலக அமைதிக்கு மிகப்பெரிய எதிரி, தென்கொரியா போலவே எல்லை பிரச்சனைகளால் இந்தியா மிகவும் பாதிக்கப்படுகிறது என பேசினார்.

மேலும் அவர், 200,000 டாலர்களை தூய கங்கை திட்டத்துக்கு நல்ல முறையில் பயன்படுத்துவேன் என உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பேன் கீ மூன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தியாவுடனான தென்கொரியாவின் வணிக முதலீடை ஊக்குவிக்கும் விதமாக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.