பிரதமர் பதவியேற்பு விழாவில் மனைவியுடன் ஆஜரான சூப்பர் ஸ்டார்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் செல்பி எடுத்து கொண்டாட்டம்!?

 

பிரதமர் பதவியேற்பு விழாவில் மனைவியுடன் ஆஜரான சூப்பர் ஸ்டார்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் செல்பி எடுத்து கொண்டாட்டம்!?

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதுடெல்லி: பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து, பெரும் வெற்றி பெற்றது பா.ஜ.க. இதனால் இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகி உள்ளார். இதற்கான பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள குடியரசு மாளிகையில் நேற்று நடைபெற்றது. மோடிக்குக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

modi

அவரை தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், நிதின்கட்கரி, சதானந்த கவுடா, அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராம் விலாஸ் பாஸ்வான், நரேந்திர சிங் தோமர், ரவிசங்கர் பிரசாத், நரேந்திர சிங் தோமர், ஹசீம்ரத் கவுர், தாவர்சந்த் கெலோட், ஜெய் சங்கர், ஹர்சிம்ரத் பாதல், ரமேஷ் போக்ரியால், அர்ஜூன் முண்டா தாவர் சந்த், ஸ்மிருதி இரானி, ஹர்ஷ் வர்தன், பிரகாஷ் ஜவடேகர், ஹர்ஷவர்தன், பியுஷ் கோயல், தர்மேந்திர பிரதான், முக்தர் அப்பாஸ் நக்வி, பிரக்லத் ஜோஷி ஆகியோர் பதவியேற்றனர்.

rajini

மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை, ஈரான், கிர்கிஸ்தான், தாய்லாந்து, பூடான் போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசியல்  தலைவர்கள் கலந்து  கொண்டனர். அதே போல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களும் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

rajini

திரைத்துறையைப் பொறுத்தவரையில், நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து  கங்கனா ரனாவத்  ஷாகித் கபூர், அனுபம் கேர், கரண் ஜோகர், விவேக் ஓபராய் உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்களும்  விழாவிற்கு வருகை புரிந்தனர்.

ambani

அதே போல்  தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானி, ரத்தன் டாடா உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து கொண்டு மோடியை சிறப்பித்ததால்  குடியரசு தலைவர் மளிகை விழாக் கோலம் பூண்டது  குறிப்பிடத்தக்கது.