‘பிரதமரின் ரூ.5000 பெற, ரூ.300 செலுத்த வேண்டும் என பரவிய வதந்தி’…பணத்தை கொடுத்து ஏமாந்த கிராம மக்கள்!

 

‘பிரதமரின் ரூ.5000 பெற, ரூ.300 செலுத்த வேண்டும் என பரவிய வதந்தி’…பணத்தை கொடுத்து ஏமாந்த கிராம மக்கள்!

இதனிடையே மத்திய அரசு பணம் தருவதாக பல வதந்திகள் பரவி வருகின்றன. 

கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் வருமானமில்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு உதவும் பொருட்டு மாநில அரசுகள் மக்களுக்கு நிவாரண உதவி அளித்து வருகின்றன. இதனிடையே மத்திய அரசு பணம் தருவதாக பல வதந்திகள் பரவி வருகின்றன. 

ttn

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பிரதமர் மோடி ரூ.1000 தருவதாகவும், அதற்கு ரூ.300 செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு கும்பல் பணம் திரட்டி வந்துள்ளது. அதனை நம்பிய மக்கள் அவர்களிடம் பணத்தை கொடுத்துள்ளனர். கடைசியில் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு அந்த கும்பல் எஸ்கேப் ஆகியுள்ளது. அதே போல அம்மாவட்டத்தின் நொய்க்காரப்பட்டியிலும் ஒரு கும்பல் பணம் வாங்க முயற்சி செய்துள்ளது. ஆனால், முன்கூட்டியே சுதாரித்துக் கொண்ட மக்கள், அவர்களை அடித்து உதைத்து போலீசிடம் ஒப்படைந்துள்ளனர். பிரதமர் பணம் தருவதாக எண்ணி மக்கள் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர்.