பிரதமரின் சுய ஊரடங்கு : மார்ச் 22 ஆம் தேதி மெட்ரோ ரயில்கள் ரத்து!

 

பிரதமரின் சுய ஊரடங்கு : மார்ச் 22 ஆம் தேதி மெட்ரோ ரயில்கள் ரத்து!

22 ஆம் தேதி சுய ஊரடங்கு முறையைப் பின்பற்றுவோம் என்றும் அத்தியாவசிய பணியில் வேலை செய்பவர்கள் தவிர வேறு யாரும் வெளியே வர வேண்டாம் என்று கூறினார்.

கொரோனா குறித்து மக்கள் பீதியடைந்திருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மக்களிடம் உரையாடினார். அதில், கொரோனா இந்தியாவுக்கு வராது என்று நினைக்க வேண்டாம். மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வெளியே வர வேண்டாம். முடிந்தவரை 22 ஆம் தேதி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். யாரும் மெத்தனமாக இருக்க வேண்டாம். கொரோனா இந்தியாவைப் பாதிக்காது என்று எண்ணினால் அது தவறு. வரும் சில வாரங்களுக்கு அரசுடன் ஒத்துழைப்பு கொடுங்கள் என்று தெரிவித்தார். 

ttn

மேலும், 22 ஆம் தேதி சுய ஊரடங்கு முறையைப் பின்பற்றுவோம் என்றும் அத்தியாவசிய பணியில் வேலை செய்பவர்கள் தவிர வேறு யாரும் வெளியே வர வேண்டாம் என்று கூறினார். கொரோனாவை ஒழிக்கும் இந்த முடிவுக்குப் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமரின் சுய ஊரடங்குக்குச் சென்னை மெட்ரோ நிர்வாகமும் ஒத்துழைப்பு அளித்து 22 ஆம் தேதி மட்டும் மெட்ரோ ரயில்களை ரத்து செய்ய உள்ளதாகச் சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

அதில், 22.03.2020 சுய ஊரடங்கு   அனுசரிக்கப்படவுள்ள நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் தனது சேவைகளை ஒரு நாள் மூடி வைக்க முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை பொதுமக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க ஊக்குவிப்பதும், சமூக தூரத்தைப் பராமரிப்பதும், கோவிட் -19 உடன் போராடுவதும் ஆகும்” என்று தெரிவித்துள்ளது.