பிப்ரவரி மாத சம்பளம் கிடைக்குமா? – அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கவலை

பிப்ரவரி மாத சம்பளம் கிடைக்குமா? – அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கவலை

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அந்தந்த அந்த துறை மூலம் சம்பள பட்டியல் பெறப்பட்டு, மாவட்ட கருவூலம் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த செயல்பாடுகள் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டுவிட்டது. இதற்காக பிரத்தியேக மென்பொருளை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.இந்த புதிய மென்பொருள் பயன்படுத்தி ஏப்ரல் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழக அரசு ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதத்துக்கான சம்பளம் குறித்த தேதியில் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அந்தந்த அந்த துறை மூலம் சம்பள பட்டியல் பெறப்பட்டு, மாவட்ட கருவூலம் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த செயல்பாடுகள் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டுவிட்டது. இதற்காக பிரத்தியேக மென்பொருளை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.இந்த புதிய மென்பொருள் பயன்படுத்தி ஏப்ரல் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சேலம், ஈரோடு, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு மட்டும் நடப்பு மாதம் முதலே இந்த திட்டத்தின் கீழ் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
ஒவ்வொரு மாதமும் 25ம் தேதியே அந்த மாதத்திற்கான சம்பள பட்டியல் தயாரிக்கப்பட்டு கருவூலத்துக்கு அனுப்பப்பட்டுவிடும். அதன் அடிப்படையில் ஊழியர்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். ஆனால், சர்வர் பிரச்னை காரணமாக தகவல் பதிவு செய்வதில் பிரச்னை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், பட்டியல் அனுப்புவதில் தடங்கள் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதனால், நடப்பு மாதம் உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

salary.jpg

இது குறித்து அரசு அலுவலர்கள் கூறியபோது, தற்போது அளிக்கப்பட்டுள்ள புதிய மென்பொருளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விவரம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சர்வர் பிரச்னை காரணமாக பதிவு செய்யப்பட்ட தகவல்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் அழிந்துவிடுகிறது. மீண்டும் மீண்டும் பதிவு செய்ய வேண்டி உள்ளதால் தாமதம் ஆகிறது. மேலும், புதிய மென்பொருள் பற்றிய பயிற்சி ஊழியர்களுக்கு அளிக்கப்படவில்லை. இதனால் அவர்களால் விரைவாக செய்ய முடியவில்லை. 
தமிழக அரசுக்கு இந்த புதிய மென்பொருளை தயார் செய்து கொடுத்த நிறுவனம் அலட்சியப் போக்குடன் நடந்து வருகிறது. என்ன பிரச்னை என்று கண்டறிந்து தீர்வு காண முயலாமல், இப்போதைக்கு சரி செய்ய முடியாது என்று கூறுகிறார்கள். இதனால், முழு சம்பள பட்டியலும் தயாராகவில்லை. சம்பள பட்டியல் தயாரானால் மட்டுமே பணம் அனுப்ப முடியும். இதனால் இந்த மாதம் சம்பளம் குறித்த தேதியில் கிடைப்பது சிரமம்தான் என்றனர்.