பித்தலாட்ட அரசியலின் உச்சக்கட்டத்தில் திமுக- அமைச்சர் கடம்பூர் ராஜூ

 

பித்தலாட்ட அரசியலின் உச்சக்கட்டத்தில் திமுக- அமைச்சர் கடம்பூர் ராஜூ

மொழிப் பிரச்சினையில்  எதிர்க்கட்சிகள் பேசுவது பித்தலாட்ட  அரசியலின் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

மொழிப் பிரச்சினையில்  எதிர்க்கட்சிகள் பேசுவது பித்தலாட்ட  அரசியலின் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் மொழி தொன்மையான மொழி இதனை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பயிற்றுவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். எப்படி 5 ஆண்டு காலம் மத்திய அரசின் திட்டங்களை ஒதுக்கி மறைத்து பொய் பிரச்சாரத்தை மக்களிடையே தெரிவித்து ஏமாற்றத்தை உண்டாக்கினார்களோ மொழிப் பிரச்சினையில் அதேபோல தொடர்ந்து பித்தலாட்ட அரசியலை  திமுக குறிப்பாக ஸ்டாலின் செய்து வருகிறார்

தமிழ் செம்மொழி என்று திமுக தமிழை வளர்க்கவில்லை. கனிமொழியை தான் வளர்த்தார்கள்.  திமுக ஆட்சியில் பெயருக்காக, பிழைப்புக்காக, அரசியலுக்காக தமிழைப் பயன்படுத்தினார்கள். தவிர சொல்லும்படி ஒன்றும் செய்யவில்லை. தமிழுக்கு உரிய அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அதிமுக தான் இருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும்.  அண்ணாவின் கொள்கை வழியில் செயல்படும் அதிமுக அவர் எவ்வாறு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினரோ, அதில் சிறிதளவு வழுவாமல் இருப்பது அதிமுக தான். திமுக இரட்டை வேடம் போடுகிறது. மொழியிலும் சரி , மக்களை ஏமாற்றுவதிலும் சரி திமுகவின் அரசியல் நிரந்தரமாக எடுபடாது

நீட் தேர்வுக்காக இறுதிவரை போராடிய மாநிலம் தமிழகம்தான். இதற்காக தனியாக தமிழகத்தில்தான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  நீட் தேர்வில் இன்றைக்குக்கூட தமிழக மாணவர்கள் 45% தேர்ச்சி பெற்றுள்ளனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக மாணவர்கள் சிறந்த தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். இன்றைக்கும் நீட் தேர்வு வேண்டாம் என்ற கொள்கையிலிருந்து நாங்கள் மாறுபடவில்லை.  ஆனால் அனைத்து மாநிலங்களிலும் நீட் கட்டாயம் என்பதால் வேறு வழியில்லாமல் இங்கு இருக்கிறது

அதே போன்று பேரறிவாளனுக்கு திமுக ஆட்சியில் கூட பரோல் வழங்கவில்லை. 27 ஆண்டுகளுக்கு பின்பு அதிமுக அரசுதான் பரோல் வழங்கியது” என்று கூறினார்.