பிட்டு படம் பாக்க வேற இடமே கிடைக்கலையா ராசா?

 

பிட்டு படம் பாக்க வேற இடமே கிடைக்கலையா ராசா?

வீடியோ இரண்டு நிமிடம் ஓடும்வரை அதில் லயித்திருந்த கம்யூட்டர் ஆபரேட்டருக்கு பிறகுதான் உரைத்திருக்கிறது செயலரும் மற்ற அதிகாரிகளும் அங்கே இருப்பது. பாய்ந்து சென்று கேபிள்களை பிடுங்கி எறிந்துவிட்டு தலையை சொறிந்து நின்றிருக்கிறார். செயலர் முக்தா சிங் பெண் அதிகாரி வேறு. சொல்லவா வேண்டும் கோபத்திற்கு?

சட்டசபையில ஒருபக்கம் அனல்பறக்குற விவாதம் நடக்கும்போது, ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் வார்த்தைப்போர் நடத்துவாங்க. ஆனா, சபையில ஒரு மூலையில உட்கார்ந்து இருக்குற ஒரு எம்.எல்.ஏ. மட்டும் சாத்வீகமா முகத்த வச்சுக்கிட்டு, எதுக்கு இவ்ளோ சண்டைங்கிற மாதிரி அமைதியா அவரோட மொபைல் பாத்துகிட்டு இருப்பாரு. அடடா, இவ்ளோ களேபரத்துக்கு நடுவுல மஹான் மாதிரி அமைதியே உருவானவரா இருக்காரேன்னு கேமராவுல ஜூம் போட்டா, தலைவரு அவர் போன்ல சன்னி லியோன் தரிசனம் வாங்கிட்டு இருப்பதை ஏற்கெனவே நிறைய தடவை செய்திகள்ல வாசிச்சிருப்போம்.

BJP MLA watching porn

இப்ப ஒரு சேஞ்சுக்கு, தலைமைச்செயலகத்தில நடந்த ஒரு பிட் நியூஸ். ராஜஸ்தான் தலைமைச் செயலகத்துல உணவு மற்றும் பொது வினியோக‌த்துறை சார்பா ஆய்வுக்கூட்டம் நடக்குது. துறைச் செயலர் முக்தா சிங், துறையில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து 33 மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த அதிகாரிகளோடு விவாதிக்கிறார். பெரிய ஸ்க்ரீனில் பவர்பாய்ண்ட் பிரசண்டேஷனோடு அருமையான கலந்துரையாடலின்போது ஒரு ஷார்ட் கமர்ஷியல் பிரேக். ஷார்ட் கமர்ஷியல் பிரேக் என்றவுடன், விளம்பரம் போடப்போகிறார்கள் என்று நினைத்திருக்கும்போது, திரையில் பலான படம் ஓட துவங்குகிறது.

Rajasthan Food Department Meeting

வீடியோ இரண்டு நிமிடம் ஓடும்வரை அதில் லயித்திருந்த கம்யூட்டர் ஆபரேட்டருக்கு பிறகுதான் உரைத்திருக்கிறது செயலரும் மற்ற அதிகாரிகளும் அங்கே இருப்பது. பாய்ந்து சென்று கேபிள்களை பிடுங்கி எறிந்துவிட்டு தலையை சொறிந்து நின்றிருக்கிறார். செயலர் முக்தா சிங் பெண் அதிகாரி வேறு. சொல்லவா வேண்டும் கோபத்திற்கு? பலான படம் துறை ஆய்வுக்கூட்டத்தில் ஓடியதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க‌ விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட்டிருக்கிறார்.