பிஜேபியின் தேர்தல் வெற்றிக்கு அணிலாக உதவிய விவேக் ஓபராயின் அடுத்த காவியம்!

 

பிஜேபியின் தேர்தல் வெற்றிக்கு அணிலாக உதவிய விவேக் ஓபராயின் அடுத்த காவியம்!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மட்டுமே தனிப்பெரும்பான்மையாக 400 இடங்களுக்கும்மேல் வெற்றி பெற்றிருக்கும் – விவேக் ஓபராய் நடிப்பில் வெளியான பி.எம். மோடி படத்தின் ட்ரெய்லர் மட்டும் தேர்தலுக்கு பின்பு வெளியாகியிருந்தால். பிஜேபியின் பிரமாண்ட வெற்றிக்குப் பின்னால் தானும் ஒரு அணிலாக இருந்து உதவியதாக சீரியசாக நம்பும் விவேக ஓபராயின் அடுத்த ஆபரேஷன் பாலகோட் விமான தாக்குதலை வைத்து எடுக்கப்போகும் படம்தானாம். விங் கமாண்டர் அபிநந்தனின் வீரசாகசங்களை மையமாக வைத்து, இந்திய விமானப்படையின் பெருமையை உணர்த்தும்வகையில் இந்த படம் தயாரிக்கப்படவிருக்கிறதாம்.

”நமது படையினரின் வீரத்தை பறைச்சாற்றும்வகையில் இப்படத்தை எடுப்பதில் ஒரு இந்தியனாக பெருமைப்படுகிறேன். இந்தப் படத்தை தயாரிப்பதற்கான அனுமதியை இந்திய விமானப்படை வழங்கியிருப்பதை அறிவிப்பதிலும் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இப்படம் உருவாக இருக்கிறது, ஹாலிவுட்டில் அவரவர் நாட்டு ராணுவ பெருமையை பேசும் படங்கள் வெளியாகும்போது, நம் படையினரை நாம் பெருமைப்படுத்த வேண்டாமா” என உற்சாகமாகிறார் ஓபராய். இந்தப் படத்தையாவது ஒழுங்கா எடுப்பியா ராசா?