பிச்சை எடுத்த பணத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் சுத்தீகரிப்பான்! – தூத்துக்குடியின் விநோத மனிதர்

பிச்சை எடுத்த பணத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் சுத்தீகரிப்பான்! – தூத்துக்குடியின் விநோத மனிதர்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தான் பிச்சை எடுத்து சேமித்த பணத்தைக் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவர் மனைவி 1879ம் ஆண்டு காலமானார். அதன்பிறகு இவர் மும்பைக்கு வேலை தேடிச் சென்றார். அங்கு கோவிலில் தூய்மை பணி மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை செய்து வந்த இவர், கடந்த 2000ம் தூத்துக்குடி திரும்பினார்.

oldman

தனக்கென குடும்பம் இல்லாததால் எதையும் சேமித்து வைக்காமல், பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டிவந்துள்ளார். பிச்சை எடுப்பதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு தன்னுடைய அன்றாட வாழ்க்கையை ஓட்டிய அவர், மீதமாகும் பணத்தை சேமித்து வைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

tuticorin

தற்போது அவர் ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை, வீரநாராயணமங்கலம், செண்பகராமன்புதூர் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பான் இயந்திரங்களை வாங்கி கொடுத்துள்ளார்.
தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்காக உதவி செய்து வரும் பாண்டியை கவுரவப்படுத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்தனர். அவரை நேரில் அழைத்து அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பலரும் பாண்டியின் செயலை பாராட்டி வருகின்றனர்.