பிசியான ஹைவேஸ் சாலையில், செல்ஃபி வித் முதலை!

 

பிசியான ஹைவேஸ் சாலையில், செல்ஃபி வித் முதலை!

கண்ணே மணியே, வழிய விடுடா, எல்லாரும் வேலைக்குப் போகணும் என கெஞ்சி கூத்தாடியதை அம்முதலை கண்டுகொள்ளவே இல்லை. நீ இப்ப வழி விடலேன்னா பெரிய அதிகாரி என்னை வேலையை விட்டு தூக்கிடுவான்டா என ஒரு அதிகாரி முதலைக்கண்ணீர் வடிக்கவும், முதலைக்கு மனம் இளகிவிட்டது.

மெக்சிகோ, டெம்பிக்கோ நகருக்கு சற்று வெளியே, நெடுஞ்சாலையில் கார்கள் அணிவகுத்து நிற்கினறன. போக்குவரத்து சிக்னல் எல்லாம் எதுவும் இல்லை. ஏன் எல்லாரும் வண்டியை நகர்த்தாமல் வழியிலேயே நிப்பாடி வைத்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் வந்த போக்குவரத்து போலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வந்தவர்கள், சாலையின் குறுக்கே 10 அடி நீள முதலை ஒன்று சாவகாசமாக சன்பாத் எடுத்துக்கொண்டிருந்தது.

Crocodile on Road

“கண்ணே மணியே, வழிய விடுடா, எல்லாரும் வேலைக்குப் போகணும்” என கெஞ்சி கூத்தாடியதை அம்முதலை கண்டுகொள்ளவே இல்லை. “டேய் டேய் ஜுவான்கோ (முதலை பேராம்), இப்ப நீ வழி விட்டேன்னா, அப்பா உனக்கு சாயந்தரம் நல்ல லெக் பீஸா வாங்கி தருவேண்டா, நீ இப்ப வழி விடலேன்னா பெரிய அதிகாரி என்னை வேலையை விட்டு தூக்கிருவான்டா” என பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரி முதலைக்கண்ணீர் வடிக்கவும், முதலைக்கு மனம் இளகிவிட்டது. உடனே வழிவிட்டு, அருகில் இருந்து நீர்நிலைக்குள் போய்விட்டது. சாலையில் கூடியிருந்தவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? வேறென்ன, செல்ஃபிதான். டெம்பிக்கோ நகர்வாசிகளுக்கு முதலைகள் சாலையை கடப்பதை அடிக்கடி காண்பதுண்டாம்.