பிக் பாஸ் 3-யில் இவருடன் டேட் செல்ல தயார்! ஐஸ்வர்யா தத்தா ட்வீட்! 

 

பிக் பாஸ் 3-யில் இவருடன் டேட் செல்ல தயார்! ஐஸ்வர்யா தத்தா ட்வீட்! 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் தனக்கு யாருடன் டேட் செய்ய ஆசை என்று ஐஸ்வர்யா தத்தா  கூறியது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் தனக்கு யாருடன் டேட் செய்ய ஆசை என்று ஐஸ்வர்யா தத்தா  கூறியது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு முதல் ஒளிபரப்பாகிறது. 15 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு இதில் பின்னர் 16வது போட்டியாளராக மீராமிதுன் களமிறங்கியுள்ளார். அவர் வந்த பிறகு தான் நிகழ்ச்சி கொஞ்சம் ஆட்டம் சூடுபிடித்துள்ளது என்று ரசிகர்கள் கூறுகின்றனர். 

aishwara

இந்த நிலையில் இதில் ரசிகர்களுக்கு பரிட்சியம் இல்லாத சில போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர் அதில் ஒருவர் தான் முகன் ராவ். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. குறிப்பாகப் பெண்கள் மத்தியில் இவருக்குப் பெறும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

mugan

இந்த நிலையில் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான ஐஸ்வர்யா தத்தாவுக்கு, முகன் மீது ஈர்ப்பு வந்துள்ளது . பொதுவாக ஐஸ்வர்யா அடிக்கடி தனது ரசிகர்களுடன் லைவ் சாட் செய்து வருவார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்குப் பதில் அளித்துவந்தார். 

mugan

அப்போது ரசிகர் ஒருவர் பிக் பாஸ் 3யில் உங்களுடைய  க்ருஷ் யாரு என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த ஐஸ்வர்யா, ‘எனக்கு இதில் மிகவும் பிடித்தவர் முகன் ராவ் தான். அவர் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது என்று கூறினார். அதைத் தொடர்ந்து, ‘வாய்ப்பு கிடைத்தால் அவருடன் டேட் செல்ல தயார்’ என்று கூறியுள்ளார்.