பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ராம்கி கலந்து கொள்கிறாரா? 

 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ராம்கி கலந்து கொள்கிறாரா? 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நடிகர் ராம்கி பங்குயேற்கவுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியை முற்றிலும் மறுத்துள்ளார். 

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நடிகர் ராம்கி பங்குயேற்கவுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியை முற்றிலும் மறுத்துள்ளார். 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இம்மாதம் 23 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான புரோமமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தைத் துண்டும் வகையில் அமைந்துள்ளது. 

இந்த நிலையில் இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வரும் நிலையில் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது இதில் 80,90களில் பல படங்களில் நடித்துள்ள முன்னணி நடிகர் ராம்கி கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல் பரவியது. 

ramki

இந்த குறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த அவர் இந்த வதந்தியை முற்றிலும் மறுத்துள்ளார். மேலும் தன்னிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து யாரும் அணுகவில்லை என்று கூறியுள்ளார். 

முன்னதாக நடிகை லைலா,ஸ்னேகா ஆகியோர் பெயர்களும் இதில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.