பிக் பாஸ் 3 தமிழ்: மகள்களுக்கு சோறு ஊட்டி தாய் பாசத்தை வெளிப்படுத்திய வனிதா

 

பிக் பாஸ் 3 தமிழ்: மகள்களுக்கு சோறு ஊட்டி தாய் பாசத்தை வெளிப்படுத்திய வனிதா

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னை:  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

losliya

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி 81 வது நாளை தொட்டுள்ளது. பிக் வீட்டில் இரண்டு நாட்களாக  ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. முகினின்  அம்மா நிர்மலா மற்றும் தங்கை ஜனனி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சியில்  லாஸ்லியாவின்  குடும்பத்தினர் வந்திருந்தனர்.

 

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், வாயாடி பெத்த புள்ள பாடல் ஒலிக்கப்பட  பிக் பாஸ் வீட்டுக்குள் வனிதாவின் குழந்தைகள் இருவரும் வருகின்றனர். அவர்களைக் கண்டு  வனிதா மட்டுமில்லாது ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள்.

vanitha

வனிதா அவர்களுக்குச் சாப்பாடு ஊட்டி விடுவதுடன் அவர்களுடன் சேர்ந்து மொத்த பிக் பாஸ் வீடும்  ஆடி மகிழ்கிறது. முன்னதாக வெளியான முதல் புரொமோவில்  தர்ஷனின் குடும்பத்தினர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.