பிக் பாஸ் வீட்டைவிட்டு வந்ததும், முத்தக் காதலி கரம் பிடித்தார் டேனி!

 

பிக் பாஸ் வீட்டைவிட்டு வந்ததும், முத்தக் காதலி கரம் பிடித்தார் டேனி!

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட டேனி, தனது காதலியை திருமணம் செய்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட டேனி, மிகவும் கலகலப்பான போட்டியாளராக இருந்தார். கடந்த வாரம் இவரது பெயர் நாமினேஷனில் இருந்ததையடுத்து, மக்களின் வாக்குகள் அடிப்படையில் டேனி நேற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற கையோடு, தனது காதலி குட்டுவை டேனி பதிவுத் திருமணம் செய்துக் கொண்டார். இதனை டேனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

அதில், எனது நீண்ட நாள் காதலி குட்டுவை எனது மனைவியாக உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமைக் கொள்கிறேன். சில குடும்ப சிக்கலால் அனைவருக்கும் சொல்ல முடியவில்லை. உங்களது ஆசிர்வாதங்களுடன் நாங்கள் கணவன் – மனைவியாக புதிய வாழ்க்கையை தொடங்குகிறோம்’ என பதிவிட்டுள்ளார்.