பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த முகின் அம்மா: நெகிழ வைக்கும் புரொமோ!

 

பிக் பாஸ் வீட்டுக்குள்  வந்த முகின் அம்மா: நெகிழ வைக்கும் புரொமோ!

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி 79வது நாளை தொட்டுள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் பிக் பாஸ் நாமினேஷன் லிஸ்டில் வனிதா, கவின், தர்ஷன், சாண்டி ஷெரின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பிக்  பாஸ் எல்லோரும் ஃப்ரீஸ் என்று சொல்ல, வீட்டுக்குள் முகினின்  அம்மா வருகிறார். அவரை பார்த்த முகின்  ஓடி சென்று கட்டியணைத்துக் கொள்கிறார். எப்படிடா இருக்க என்று கேட்டு அழுகிறார். இதை தொடர்ந்து முகினின்  தங்கை வீட்டுக்குள் வர ஓடி சென்று தங்கையைத் தூக்குகிறார் முகின். இவையனைத்தையும்  சீக்ரெட் ரூமில் இருந்தபடி பார்த்து கண்ணீர் விடுகிறார் சேரன்.

mugen

ஏற்கனவே இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறவுள்ளது என்று தகவல் வெளியான  நிலையில் போட்டியாளர்களின்  சொந்தங்கள் வீட்டிற்குள் வருவார்கள் என்பதால் இந்த வாரம்  உணர்ச்சிமயமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.