பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் விசிட் அடிக்கும் ஹவுஸ் மேட்ஸ்!

 

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் விசிட் அடிக்கும் ஹவுஸ் மேட்ஸ்!

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் போட்டி முடிய ஒருவார காலமே உள்ள நிலையில் தற்போது பைனலுக்கு 4 பேர் தகுதி பெற்றுள்ளனர்.  இதுவரை 12 போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

reshma

குறிப்பாக தர்ஷன் நேற்று வெளியேறியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறுதிப் போட்டியில்  தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வெளியேறியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. சிலர் அவருக்காகக் கண்ணீர் வடித்தனர்.

 

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.அதில் , ‘பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு வெளியேறிய பாத்திமா பாபு, ரேஷ்மா, மோகன் வைத்யா, மீரா மிதுன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் விசிட் அடிக்கின்றனர். அவரை கண்டு ஹவுஸ்மேட்ஸ் உற்சாகத்தில் திளைக்கின்றனர். மேலும் ஹவுஸ்மேட்ஸுக்கு உடைகள் அளிக்கின்றனர். அதை போட்டுக்கொண்டு சாண்டி  உற்சாகமாக நடனம் ஆடி காட்டுகிறார்’  இவ்வாறு அந்த புரொமோ  வீடியோ முடிகிறது.