பிக் பாஸ் வீட்டிற்குள் போகிறேனா? நடிகை சாந்தினி ஓபன் டாக் 

 

பிக் பாஸ் வீட்டிற்குள் போகிறேனா? நடிகை சாந்தினி ஓபன் டாக் 

‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் நடிகை சாந்தினி தமிழரசன் பங்கேற்பதாக வெளியான செய்தி குறித்து பேட்டியளித்துள்ளார். 

சென்னை:‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் நடிகை சாந்தினி தமிழரசன் பங்கேற்பதாக வெளியான செய்தி குறித்து பேட்டியளித்துள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. இரண்டு சீசன்கள் நிறைவடைந்த நிலையில் மூன்றாவது சீசன்காக மக்கள் ஆர்வத்துடன் காத்து இருந்தனர். அந்த வகையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சி வரும் 23ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. 

அதைத் தொடர்ந்து, இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வரும் நிலை தொடங்கியுள்ளது. அதில் ஒரு பகுதியாக பிரபல நடிகை சாந்தினி தமிழரசன் பெயரும் அடிபட்டுள்ளது. 

chandhini

இந்த நிலையில் இது குறித்து பிரபல ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, ‘பிக் பாஸ் 3-ல் பங்கேற்க எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை, அப்படி வந்தாலும்  நிகழ்ச்சியில் பங்குக்கேற்க போவதில்லை’ என்று கூறியுள்ளார். 

இவர் தற்போது கறி சோறு, பற, அய்லா உள்ளிட்ட ஹாரர் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.