பிக் பாஸ் முகினின் தந்தை திடீர் மரணம்…சோகத்தில் குடும்பத்தினர்!

 

பிக் பாஸ் முகினின்  தந்தை திடீர் மரணம்…சோகத்தில் குடும்பத்தினர்!

‘நீதான் நீதான்’ என்ற பாடல் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து உள்ள முகெனுக்கு தீவிரமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. 

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் அனைவர் மனதிலும் தனி இடம் பிடித்தவர் முகென் ராவ். தன்னுடைய திறமையாலும், விடாமுயற்சியாலும் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வந்த முகென், பிக்பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் பட்டத்தையும் தட்டி சென்றார்.

ttn

பாடலாசிரியர், பாடகர், நடிகர், மாடலிங் என பன்முக திறமைகளை கொண்டுள்ள முகென் ராவ்வை மலேசியாவின் பாப் பாடகர் என்று தான் எல்லோரும் அழைக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில் ‘நீதான் நீதான்’ என்ற பாடல் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து உள்ள முகெனுக்கு தீவிரமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. 

ttn

இருப்பினும் முகின்  பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது குடும்பத்தை பற்றியும், தினமும் அப்பா அம்மா சண்டை போடுவார்கள் அதனால் நான் தற்கொலை முயற்சி செய்துள்ளேன் என்றும் உருக்கமாக பேசியிருந்தார். அதன் பின்னர் ஒருமுறை முகின்  அப்பா வீடியோ காலில்  பேசி அவருக்கு ஆறுதல் கூறினார் என்பதெல்லாம் எல்லாரும் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் முகினின் தந்தை பிரகாஷ் ராவ்  உடல்நலக் குறைவால் இறந்துவிட்டதாகத்  தகவல்கள்  வெளியாகியுள்ளன.  மலேசியாவில் அவரது இறுதி சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெற இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் முகின்  ரசிகர்கள் அவரது தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.