பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் நடத்த கூடாது: வேல்முருகன் எதிர்ப்பு!

 

பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் நடத்த கூடாது: வேல்முருகன் எதிர்ப்பு!

தமிழில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். முதல் சீசனிலிருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு இருந்து வந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவதற்குத் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

தமிழில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். முதல் சீசனிலிருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு இருந்து வந்துள்ளது. குறிப்பாக நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவதற்காகவே  ஒருகூட்டம் பிக் பாஸ் பிரியர்களாக மாறினார்கள். 

bb

கமல் ஹாசனும் பிக் பாஸ் மேடையை அரசியல் பரப்புரை செய்யும் களமாக மாற்றிக்கொண்டார். அதை பலமுறை அவரே வெளிப்படையாகக் கூறினார். முதல் சீசனையடுத்து இரண்டாவது சீசனை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி எழுந்த போது மீண்டும் கமல் ஹாசனே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தற்போது மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தமுறையும் சர்ச்சைக்குப் பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. 

vel

இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், ‘அரசியலுக்கு வந்த பிறகு கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளைக் கமல் நடத்தக்கூடாது’ என்று கூறியுள்ளார்.