பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அதிரடி மாற்றம்! 

 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அதிரடி மாற்றம்! 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் தமிழில் வரும் 23ம் தேதி முதல் பிக் பாஸ்3 நிகழ்ச்சி துவங்கவுள்ளது. 

இதையும் கடந்த இரண்டு சீசனை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிலையில் தமிழ் போல் தெலுங்கில் இல்லை, அதில் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். இரண்டாவது சீசனை நடிகர் நானி தொகுத்து வழங்கினார்.  

ஆனால் அதில் நடக்கும் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்று தெறியாதலால் அவர் மூன்றாவது சீசனை  தொகுத்து வழங்க மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பிக் பாஸ் மூன்றாவது சீசனை தெலுங்கில் யார் தொகுத்து வழங்குவர் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர . 

nagarjuna

இந்த நிலையில், தற்போது தெலுங்கு பிக் பாஸ் 3வது சீசனை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் அதற்கான ப்ரோமோ ஷூட்டில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.