பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் பிரபல நடன இயக்குநர்!

 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் பிரபல நடன இயக்குநர்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடன இயக்குநர் ஒருவர் போட்டியாளராகக் கலந்து கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பிரபல நடன இயக்குநர் ஒருவர் போட்டியாளராகக் கலந்து கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நாளை முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவுள்ளது. கடந்த இரண்டு சீசன் போல் இதையும் உலக நாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார். இந்த முறை கடந்த இரண்டு சீசன் போல் இல்லாமல் சற்று போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

அதற்கு ஏற்றார் போல் இந்த முறை பிக் பாஸ் வீட்டின் செட்டப்பும் சற்று வித்தியாசமாக மாற்றப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இந்த முறை போட்டியில் இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வரும் நிலையில் தொடங்கியுள்ளது. 

அதில் முதல் ஆளாக நடிகை மதுமிதா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து பாடகர் மற்றும் நடிகரான மோகன் வைத்யா போட்டியாளராகப் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. கடந்த முறை பாடகர் ஆனந்த் வைத்தியநாதன் கலந்துகொண்ட நிலையில் இம்முறையும் ஒரு பாடகரை களமிறக்க நிகழ்ச்சிக் குழு முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டது.

sandy

இந்த நிலையில் நடன இயக்குநர் சாண்டி கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் முதல் சீசனில் இவருடைய முதல் முதல் மனைவி காஜல் போட்டியாளராகக் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.