பிக் பாஸ் தர்ஷன் காதலி இவர் தானா? பார்த்தால் ஷாக் ஆயிடுவிங்க!

 

பிக் பாஸ் தர்ஷன் காதலி இவர் தானா? பார்த்தால் ஷாக் ஆயிடுவிங்க!

சென்னை: பிக் பாஸ் 3 போட்டியாளர் தர்ஷனின்  காதலி யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பிக் பாஸ் 3 சீசன் தொடங்கி, முதல் இரண்டு நாட்களில் போட்டியாளர் அனைவரும் பாசம் மற்றும் அன்பைப் பரிமாறிக் கொண்டனர். ஆனால் தற்போது திடீரென போட்டியாளர்களுக்குச் சண்டை வர தொடங்கியுள்ளது. 

இது ஒரு புறம் இருக்க, பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் குறித்து எதாவது ஒரு தகவல் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் குறித்து ஒரு ரகசியம் வெளிவந்துள்ளது. சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள இவர் மாடலாக பணியாற்றி வந்துள்ளார். 

இந்த நிலையில் அதே துறையை சேர்ந்த சனம் ஷெட்டியும், இவரும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதற்கான புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மேலும் சமீபத்தில் மீரா மீதுனிடமிருந்து கைப்பற்றிய அழகி பட்டத்தை அந்த போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த சனம் ஷெட்டிக்கும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.