பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்: புரொமோவில் வெளியான உண்மை!

 

பிக் பாஸ் டைட்டில்  வின்னர் இவர் தான்: புரொமோவில் வெளியான உண்மை!

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது

பிக் பாஸ்  நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இதுவரை முகின், சாண்டி, லாஸ்லியா மற்றும் ஷெரின் ஆகிய  நான்கு  பேர் பைனலுக்கு முன்னேறியுள்ளனர். இன்று பிக் பாஸ்  டைட்டிலை வெல்ல போவது யார் என்பதைத்  தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கிறார்கள். 

bb

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கமல் ஹாசன் , உங்களால் அதிக வாக்குகளைப் பெற்ற வெற்றியாளரை அறிவிக்கும் நாள்.. என்று கூறுகிறார். அப்போது பிக் பாஸ் டைட்டில் வின்னர் விருதை முகின்  கையில் எடுப்பது போல காட்டப்படுகிறது. 

 

இந்த போட்டியில் டிக்கெட் டு  பினாலே மூலம் இறுதி போட்டிக்குச் சென்ற முகின்  தான் இந்த சீசன் வெற்றியாளர் என்று தகவல் வெளியாகியுள்ளது/  டிக்கெட் டு  பினாலே  மூலம் இறுதி போட்டிக்குச் செல்பவர் வெற்றி பெற மாட்டார் என்ற கருத்தை உடைக்கவே இந்தமுறை முகினுக்கு இந்த டைட்டில்  கொடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் சாண்டி  இரண்டாவது இடத்தையும், லாஸ்லியா மூன்றாவது இடத்தையும் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது